ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் 5,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாள் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நடைபெறுகிறது.
இதில் இன்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம் – பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் Vertically Integrated Semi Conductor to PV Module தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அமெரிக்க சோலார் தொழில்நுட்ப நிறுவனமான ஃபர்ஸ்ட் சோலார் 5,600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
கோத்ரேஜ் நிறுவனம், டாடா எலக்ட்ரானிக்ஸ், மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் என பல நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா