நீலகிரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. tn weather
ஆகஸ்ட் 4 முதல் 9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
- அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: tn weather
- ஆகஸ்ட் 3 முதல் 7-ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
- ஆகஸ்ட் 3 முதல் 7-ஆம் தேதி வரை வங்கக்கடலின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
- ஆகஸ்ட் 3 முதல் 7-ஆம் தேதி வரை அரபிக்கடலின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 அல்லது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை: 39.2 ° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: 18.5 ° செல்சியஸ்
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு : துரைமுருகன் குற்றச்சாட்டு!
அருந்ததியர் 3% இடஒதுக்கீடு… ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!
ஹெல்மெட்டுக்கு நோ… இர்ஃபானுக்கு செக் வைத்த போலீஸ்!