தமிழ்நாட்டில் தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று(அக்டோபர் 29) தெரிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1, 2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் 2025-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.07 கோடி ஆண்கள், 3.19 பெண்கள், மற்றும் 8,964 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர்.
மாநிலத்திலேயே உயரளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6.76 லட்சம் வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இதில் 3.38 லட்சம் ஆண்கள், 3.37 லட்சம் பெண்கள், மற்றும், 125 மூன்றாம் பாலினத்தவர் அடக்கம்.
மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1.73 லட்சம் வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதி உள்ளது. இதில் 85,065 ஆண்கள், 88, 162 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் ஆவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!
தவெக உடன் காங்கிரஸ் கூட்டணியா?: செல்வப்பெருந்தகை சொன்னது என்ன?
6 மாதங்களில் பாகிஸ்தானை விட்டு ஓடிய கோச் கேரி கிரிஸ்டன்.. என்ன காரணம்?