தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்துக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளன. அதன்படி, www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று (ஜூன் 6) முதல் ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தற்காலிகமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்
“தொழில் நிறுவனங்களை சந்தித்து பேசினால் முதலீடுகள் வராது” – ஆளுநர் ரவி
“மாநில மொழி பாடத்திட்டத்தில் குறைபாடுகள்” – ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!