சாலையோர உணவகங்களுக்கு புதிய உத்தரவு!

Published On:

| By christopher

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் சாலையோர உணவகங்களுக்கான புதிய கட்டுபாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள நிபந்தனைகள் இவை:

“உணவகத்தில் பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

உணவக நிறுத்தங்களில் கழிவறையினை உபயோகிக்க பயணிகளிடமிருந்து ரூ.5 வரை வசூலிக்கலாம்.

சாலையோர உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் தரமிக்கதாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் பட்டியல் மற்றும் அதன் விலை விவரங்கள் அனைத்தும் அடங்கிய பட்டியல் பலகை பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.

உணவகங்களில் அருந்திவிட்டு கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு அதற்கான கணினி மூலமான ரசீது (Computarised Bill) கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில், எம்.ஆர்.பி. விலைக்கு மேல் அதிகப்படியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

மேற்கூறிய நிபந்தனைகளின் அடிப்படையில் உரிமம் பெறும் உணவகங்களில் உணவின் தரம், விலை, கஸ்டமர் சேவை, உட்புற பராமரிப்பு, கழிவறை, சுகாதாரம், சுவை உள்ளிட்டவைகளுக்கு மதிப்பீடு (Rating) கொடுக்கப்படும்.

அவ்வாறு மதிப்பீடு கொடுக்கப்படும் நிலையில் 5க்கு 2 மதிப்பெண்களுக்கு குறைவாக மதிப்பீடு பெற்றால், அந்த உணவகத்தின் ஒப்பந்தமானது உடனே ரத்து செய்யப்படும்” என்று போக்குவரத்துத்துறை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

நாங்குநேரி சின்னதுரை குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவு!

கடலூரில் பாமக பொதுக்கூட்டம் : நீதிமன்றம் மறுப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.