நஷ்டத்தில் தமிழகப் போக்குவரத்து கழகங்கள்!

தமிழகம்

பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்திய நிலையில் 2022 – 2023ஆம் நிதியாண்டில் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துறையின் கீழ் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், 2022 – 2023ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதில், இயக்க மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்தக் கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு ரூ.452.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய 2019 – 20ஆம் நிதியாண்டில் ரூ.5230 கோடியும், ஒரு மாதத்துக்கு ரூ.435.88 கோடி இழப்பு ஏற்பட்டது.

கொரோனா காலத்தில் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.8,328 கோடியும், ஒரு மாதத்துக்கு ரூ.694.58 கோடியும், 2021 – 22ஆம் நிதியாண்டில் ரூ.6622.21 கோடியும், ஒரு மாதத்துக்கு ரூ.551.85 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு இந்த நிதியாண்டில் நஷ்டம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : பஞ்சாபி எக் மசாலா!

+1
0
+1
2
+1
4
+1
5
+1
1
+1
2
+1
1

8 thoughts on “நஷ்டத்தில் தமிழகப் போக்குவரத்து கழகங்கள்!

  1. மற்ற மாநிலங்களை போல டிக்கெட் விலை ஏற்றலாம் இலவச பயணத்தை தவிர்த்து முதியோர்கள் பள்ளி குழந்தைகளுக்கு இலவசம் வழங்கலாம் இந்த நட்டத்தினால் பாதிக்கபடுவது போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்களே நட்டத்தை காண்பித்து 10 வருடங்களாக காலியிடம் நிரப்ப படவில்லை பணியில் இருப்பவர்களே பணிச்சுமை அதிகம்

  2. நட்டத்திற்கு முழுமையான காரணம் போக்குவரத்து கழக அதிகாரிகளின் சம்பளமே காரணம் மாவட்ட ஆட்சியர் அவரைவிட அதிக சம்பளம் வாங்கினார்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இதுவே நடத்துக்கு காரணம் இது என்று தமிழக அரசு புரிந்து கொள்ளும்

    1. நஷ்டத்துக்கு முழுமையான காரணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளே காரணம் அவர்கள் வாங்கும் சம்பளம் அதிகமாக உள்ளது ஒரு மாவட்ட ஆட்சியர் கூட இந்த சம்பளம் வாங்க மாட்டாங்க இது என்னைக்கு தமிழக அரசு புரிஞ்சிக்கிதோ அன்னைக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிக லாபத்தில் இயங்கும்

  3. Blue shirt wearing conductor not support to passenger.He will support to passenger almost reduce of loss 5% avoid.

  4. அரசியல் மற்றும் அதிகாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *