நடப்பாண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று (செப்டம்பர் 4) வெளியாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் 47,934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில் தோல்வியடைந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக சிறப்பு துணைத் தேர்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டது.
அதனையடுத்து தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதனை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’நான் சூப்பர்ஸ்டாரா?’: குட்டிக்கதை சொல்லி லாரன்ஸ் வேண்டுகோள்!