10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகம்

10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 17) வெளியிடப்படுகிறது என்று தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ஆம்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

6.04.2023 – மொழிப் பாடம்
10.04.2023 – ஆங்கிலம்
13.04.2023 – கணிதம்
15.04.2023 – விருப்ப மொழிப் பாடம்
17.04.2023 – அறிவியல்
20.04.2023 – சமூக அறிவியல்  
ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.

இந்த பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உட்பட) ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 17) வெளியிடப்பட உள்ளது.  இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தவிர 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். தங்களுக்குரிய தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று  தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

ராஜ்

கருப்புக் கொடி… தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில்  பயங்கரம்: திருச்சி சிவா பேட்டி பரபரப்பு!

’வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைவேன்’: ஓபிஎஸ் அதிரடி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *