மஞ்சள் நிறப் பேருந்துகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகம்

மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளை இன்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், பிஎஸ் 4 ரக தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. அதிலும் பெண்களுக்குக் கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்குப் பேருந்துகள் மாற்றப்பட்டு வருகின்றன. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் முதல் கட்டமாக 100 பேருந்துகள் இன்று (ஆகஸ்ட் 11) முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்தப் பேருந்து இயக்கத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும்  பல புதிய பேருந்துகள்  சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் தயாராகி வருகின்றன.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: காளான் புலாவ்

டிஜிட்டல் திண்ணை: மதுரை மாநாடு… ஓபிஎஸ் – டிடிவி திட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *