ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம்? – தமிழ்நாடு அரசு பதில்!

தமிழகம்

அரசு வாகன ஓட்டுநர்களுக்கு தலா ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்ற தவறான தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட இந்திய தொழிலாளர்கள் குறித்து பரவிய வதந்தி செய்திகளால் நாடு முழுவதும் பதற்றம் நிலவியது.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வதந்தி பரவி வருகிறது.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாநில போக்குவரத்து துறை ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

”தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000வழங்கப்பட இருப்பதாகவும்,

அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில் இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

IND VS AUS: நரேந்திர மோடி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி… புள்ளி விவரம் இதோ!

மகளிர் தினம்: பெண் காவலர்களை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *