அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ள Co-Op Bazaar App: என்ன விசேஷம்?

Published On:

| By Selvam

கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் சந்தைப்படுத்துவதற்காக Co-Op Bazaar என்ற புதிய செயலியை சென்னை  தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன.

இதை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் CO-OP Bazaar என்னும் கூட்டுறவு சந்தைக்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  

இந்த செயலி மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு 64 வகை பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர்,

“இனிமேல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். முதற்கட்டமாக எட்டு கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையான பொருட்களை டோர் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒப்புதலோடு இந்தத் திட்டத்தை அறிவித்தோம். இப்போது செயல்படுத்தி உள்ளோம்.

குறைவான விலையில் நுகர்வோர்கள் பயன்பெறும் விதமாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை அனைவரும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்”  என்று தெரிவித்துள்ளார்.

“இந்தச் செயலி மூலம் நீங்கள் பல தரப்பட்ட பாரம்பரியமான மளிகைப் பொருட்களை ஆராய்ந்து வாங்கலாம்.

புகழ்பெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள், கொல்லிமலையில் இருந்து பிரீமியம் காபி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நேர்த்தியான பொருட்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வை இந்த ஆப் வழங்குகிறது.

எங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் கூட்டுறவு நிறுவனங்களால் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட எண்ணெய்களின் விரிவான தொகுப்பை நீங்கள் காணலாம்.

இந்த எண்ணெய்கள் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி அதிகபட்ச ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை உறுதிப்படுத்துகின்றன.

அவை, உங்கள் சமையலறைக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான கூடுதலாக இருக்கும்” என்று இந்தச் செயலி குறித்து கூகுள் பிளே ஸ்டோர் தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel