TN Govt Award to 5 prohibition police officers

5 மதுவிலக்கு போலீசாருக்கு விருது!

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும்.

அந்தவகையில் இந்த ஆண்டு 5 அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 1) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

“மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக கோ.சசாங்சாய், காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மாவட்டம், ப.காசிவிஸ்வநாதன், காவல் துணைக்கண்காணிப்பாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, தெற்கு, சென்னை, கா.மு.முனியசாமி, காவல் ஆய்வாளர், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஆவடி காவல் ஆணையரகம், அ. பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, மதுரை மண்டலம் ஜெ.ரங்கநாதன், தலைமை காவலர் 318, ராணிப்பேட்டை காவல் நிலையம், அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு, ராணிப்பேட்டை ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது, முதல்வரால் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இது ஒரு உலகம்… அது ஒரு உலகம்: அப்டேட் குமாரு

“பிக் பாஸ்” சீசன் 7: ஒரே வாசல், ஒரே கிச்சன், 2 வீடு… அலப்பறை ஆரம்பம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts