தமிழ்நாடு அரசு சார்பில் 100 கண் சிகிச்சை மையங்கள்!

Published On:

| By christopher

பல்வேறு நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு தனியார் கண் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட்,  400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கும், மேக்சிவிஷன் குழுமத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான கண் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலங்கானா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய நெட்வொர்க் கொண்ட குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

உதயநிதி ஸ்டாலின் மீது மும்பையில் வழக்கு பதிவு!

வேலைவாய்ப்பு : BHEL நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel