வங்கக்கடலில் உருவான ‘ஃபெஞ்சல் புயல்’, நேற்று (நவம்பர் 30) இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
இதன்காரணமாக, சென்னையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ‘ஃபெஞ்சல் புயல்’ எதிரொலியாக நவம்பர் 29-ஆம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில், தண்ணீர் தேங்கியது.
ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டது. அதேபோல கடற்கரை – வேளச்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
சென்னையில், தொடர்ந்து கனமழை பெய்ததால், வெள்ளம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. குறிப்பாக, சென்னை மெரினா அருகே மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறி, காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவை அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.
இந்தநிலையில், இக்காணொளி தமிழகத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக வியட்நாம் நாட்டின் கேன் தோ நகரில் மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கமளித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜனாதிபதிக்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் வாபஸ் : எஸ்.எஃப்.ஐ அறிவிப்பு!