வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்!

Published On:

| By Monisha

TN Electoral roll Correction work starting from today

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்டோபர் 27) வெளியிடப்பட்டு, இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன.

இதைத் தவிர தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு சனி, ஞாயிறுகளில் (நவம்பர் 4, 5, 18, 19) நடைபெற உள்ளன. அந்த நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

இந்த முறை சில மாவட்டங்களில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பொன்னாங்கண்ணி குழம்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel