பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகம்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று(ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து முதல் நாளிலேயே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு உத்தரவுகள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

உறுதிமொழி எடுங்கள்!

சர்வதேச குழந்தை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்‌ இன்று காலை 11 மணியளவில்‌ குழந்தை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்க வேண்டும்‌.

மேலும் இது குறித்து மாணவர்கள்‌, பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆப்சென்டா?

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்வியாண்டின் முதல் நாளில் வகுப்புக்கு வராத மாணவர்களை கண்டறிய வேண்டும். மேலும் அவர்களை மீண்டும்‌ பள்ளிக்கு அழைத்து வர வைப்பதற்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்‌ நடத்த வேண்டும்‌ என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு!

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே, மாணவர்களுக்கு பாடநூல்கள்‌, நோட்டு புத்தகங்கள்‌, சீருடைகள்‌, காலணிகள்‌ உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள்‌ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாடநூல்கள்‌ வழங்கப்பட்ட உடன்‌, இன்று முதல் ஆசிரியர்கள்‌ மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தரவும்‌, அதேபோல்‌, விளையாட்டு பாடவேளைக்கு நேரம்‌ ஒதுக்கவும்‌ அனைத்து பள்ளிகளுக்கும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு அறிவுறுத்தல்களும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!

”எல்லாருக்கும் வருவது போல ஒரு நோய் வந்துச்சு”- மனம் திறந்த ரோபோ சங்கர்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0