அக்டோபர் மாதம் வரை ரூ.79,772 கோடி வருவாய்: வணிகவரித்துறை தகவல்!

Published On:

| By Selvam

வணிகவரித்துறை வருவாய் 2024-25 நிதி ஆண்டின் அக்டோபர் மாதம் வரை ரூ.79,772 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று( நவம்பர் 11) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “இணை ஆணையர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆக்கபூர்வமாக செயலாற்றிட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.70,543 கோடி ரூபாய் வருவாய்  ஈட்டப்பட்டது.   நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.79,772 கோடி ரூபாய் நிதி ஈட்டப்பட்டுள்ளது. அதாவது  கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9,229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி இந்திய அளவில் 11.59 சதவிகிதம் எனவும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி 19.39 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வம்

கிச்சன் கீர்த்தனா : ஆலூ சாட்

துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்!

பியூட்டி டிப்ஸ்: திடீர் மச்சம்… அழகா, ஆபத்தா?

விரைவு விசாவை நிறுத்திய கனடா அரசு: பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share