கோவை கார் வெடிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று(அக்டோபர் 31) பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ.விசாரித்து வருகிறது.
எனினும் இந்த வழக்கில் தமிழக காவல்துறை சிறப்பாக பணியாற்றியதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கில் துரிதமாக விசாரணையில் ஈடுபட்டு துப்பு துலக்கிய 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடும் அடையாளமாக 14 காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
கிறிஸ்டோபர் ஜெமா