மினி பஸ் ரூட் க்ளியர்… சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இயக்கம்?

Published On:

| By Selvam

தமிழகம் முழுவதும் 2,000 வழித்தடங்களில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. tn clears way for minibuses

தமிழகத்தில் மினி பஸ்களுக்கான புதிய திட்டத்தை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, புதிதாக அறிவிக்கப்பட்ட விரிவான மினிபஸ் திட்டம் 2024 இன் கீழ்,

“போதுமான அரசு பேருந்துகள் இல்லாத வழித்தடங்களில் 25 இருக்கைகள் கொண்ட தனியார் மினிபஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயக்குவதற்கு இன்று வரை 2,000 வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்கள் மினி பஸ்களை இயக்குவதற்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அனுமதி வழங்குவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வழித்தடத்திலும் ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படும்.

ஆனால், பல விண்ணப்பதாரர்கள் வந்தால், குலுக்கல் மூலம் அனுமதி வழங்கப்படும். பயணிகள் போக்குவரத்திற்கு அதிக தேவை உள்ள வழித்தடங்களில் மட்டுமே இந்த சேவை பின்பற்றப்படும்.

தனியார் மினிபஸ்கள் அதிகபட்சமாக 25 கி.மீ. வரை இயக்கப்படும். மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் அல்லது ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்கள் அருகில் அமைந்திருந்தால், இந்த தூரத்தை கூடுதலாக ஒரு கி.மீ. நீட்டிக்க முடியும்.

சென்னையில் சோழிங்கநல்லூர், பெருங்குடி, வளசரவாக்கம், துரைப்பாக்கம், ஆலந்தூர், அம்பத்தூர், மணலி, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மினி பஸ்களை இயக்கலாம். அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மினி பஸ்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. tn clears way for minibuses

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share