tn alert app stalin

TN ALERT App : இனி தமிழிலேயே வானிலை அப்டேட் பெறலாம்!

தமிழகம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பருவமழை காலகட்டத்தில் மழை குறித்த மக்களுக்குத் தேவையான விபரங்களை வழங்கத் தமிழக அரசு ஒரு செயலியை உருவாக்கி இருப்பதாக இன்று(செப்டம்பர் 30) தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவமழை காலகட்டங்களில் மழை பெய்யும். அதிலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கிற வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை பெய்யும்.

ஆனால் சமீபகாலமாக உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால், பருவ மழையானது சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ மொத்தமாகப் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்தாண்டு சென்னை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையே அதற்கு சிறந்த உதாரணம்.

எனவே மழைக் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் உரிய நேரத்தில் கிடைத்தால், அது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என்பது நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இதுநாள் வரை இந்த தகவல்களைத் தனியார் செயலிகள் மூலமாகவோ அல்லது வலைத்தளங்கள் மூலமாகவோ பெற்று வந்தார்கள்.

இந்த நிலையில், வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மழை குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க TN Alert என்கிற செயலியைத் தமிழக அரசு உருவாக்கி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதைப் பற்றிக் கூறுகையில் “ வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களைத் தமிழிலேயே இந்த செயலியின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது, வர இருக்கும் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் தமிழக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க இந்த செயலி பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஸ்டாலின் முதலமைச்சரா? செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரா?: ராமதாஸ் கேள்வி!

வெட்கப்படக்கூடிய பேச்சு : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்!

”ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது”: பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *