TN-Alert செயலி : என்னென்ன விவரங்களை பார்க்க முடியும்?

Published On:

| By Minnambalam Login1

tn alert app released

தமிழ்நாடு சம்பந்தமான வானிலை முன்னெச்சரிக்கை  வழங்கும்  TN-Alert செயலியைத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எழிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று(அக்டோபர் 3) வெளியிட்டார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 30 அன்று வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அக்டோபர் 3ஆம் தேதி பொதுமக்களுக்கான TN-Alert என்னும் கைப்பேசி செயலியை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார்.

TN-Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

இந்த செயலியில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும். மாவட்ட நிருவாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையினை அறிந்து கொண்டு. அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN- Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு அரசு முதன்மைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

”இனிதே நடந்தேறிய மாநாடு பந்தகால் விழா!” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த முக்கிய திட்டங்கள் : முழு விவரம்!

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரையும் கொன்றதா இஸ்ரேல்? நிலவரம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel