கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 2024-2025-ஆம் ஆண்டிற்கு 16,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
“2022-2023-ஆம் நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு, 13,442 கோடி ரூபாய் பயிர்க்கடனாக 17 இலட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2023-2024-ஆம் நிதியாண்டில், 16,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் என்ற உயரிய இலக்கினை நிர்ணயித்து, இதுவரை 13,600 கோடி ரூபாய் பயிர்க்கடனாக, 16 இலட்சத்து 19 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024-2025-ஆம் ஆண்டிற்கு, பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2023-2024-ஆம் ஆண்டில் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்குப் பராமரிப்பு, நடைமுறை முதலீட்டுக் கடன் இலக்காக, 2,300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1,900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2024-2025-ஆம் ஆண்டிற்கு, பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கென 700 கோடி ரூபாயும், ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடன் வட்டி மானியத்திற்கென, 200 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு கடன் வழங்கும் நிறுவனங்களை, குறிப்பாகத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளைக் கணினிமயமாக்கும் திட்டம் 141 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், கூட்டுறவு நிறுவனங்கள் கடன் வழங்கும் முறை இணையமயமாக்கப்பட்டு, கடன் ஒப்பளிப்பு வழங்கும் நேரம் குறைக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மை மேம்படுத்தப்படும்” எனத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
TN Agri Budget: 2 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.208 கோடி நிவாரணம்!