TN Agri Budget : புவிசார் குறியீடு பெறப்போகும் 10 விளைப்பொருட்கள்!

Published On:

| By christopher

TN Agri Budget 10 products to get Geocode

தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 20) அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் புதிய 10 வேளாண்  விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  தாக்கல் செய்தார்.

அப்போது வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறுவது குறித்து அமைச்சர் கூறியுள்ளதாவது, “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும்.

எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2024 – 25 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), நெல்லை அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Agri Budget 2024 : முக்கனி சிறப்புத்‌ திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி!

சுந்தர்.சி படத்தின் ஹீரோவான கவின்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel