ப்ளஸ் டூ மதிப்பெண் பட்டியல் இன்று முதல்  பள்ளிகளில் விநியோகம்!

தமிழகம்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது. அதற்கு உதவியாக  ப்ளஸ் டூ மதிப்பெண் பட்டியலை இன்று (மே 12) முதல் விநியோகம் செய்யலாம் என்று பள்ளி தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குநர் சா.சேது ராமவர்மா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,

“ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்பின் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து, கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பள்ளி மாணவர்களுக்கு இன்று (மே 12) முதல் விநியோகிக்க வேண்டும்.

மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குநரகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

RR vs KKR: ஜெய்ஸ்வால் அதிரடி சாதனைகள்… ராஜஸ்தான் அபார வெற்றி!

குடிபோதையில் யானையை விரட்டிய போதை ஆசாமி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *