ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைபுரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு நாளை (மே 11) முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
8.17 லட்சம் மாணவ-மாணவியர்கள் எழுதிய இந்தத் தேர்வு முடிவுகளை நேற்று முன்தினம் (மே 8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு நாளை (மே 11) முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராஜ்
அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா, நாசர் நீக்கம்!
CSKvsDC : சென்னையில் நாளை எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்??
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!