ஏடிஎம் இயந்திரத்தை தீயிட்டு கொளுத்திய மர்ம கும்பல்: போலீசார் விசாரணை!

தமிழகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு மர்ம கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலமாக உடைத்து பணத்தை கொள்ளையடித்த பின்னர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை எஸ்.பி.ஐ. ஏடிஎம்-மை மர்ம கும்பல் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை அடித்து தடயங்கள் எதுவும் கிடைக்காத வகையில் ஏடிஎம் இயந்திரத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார்கள்.

அதே பாணியில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏடிஎம்மில் ரூ.33 லட்சமும், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் ரூ.3 லட்சமும், போளூர் ரயில்வே நிலைய சாலையில் உள்ள ஏடிஎம்மில் ரூ.20 லட்சமும் கொள்ளை அடித்துள்ளார்கள். கொள்ளை அடித்த பின்னர் சிசிடிவி கேமரா மற்றும் ஹார்டிஸ்க் போன்றவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்-களில் ரூ.86 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்வம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *