காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலினத்தவர்கள் கோவிலில் சாமி தரிசனம்!

Published On:

| By Selvam

tiruvannamalai temple police protection

திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் காவல் துறை மற்றும் வருவாய் துறை உதவியுடன் இன்று (ஆகஸ்ட் 2) கோவிலில் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மட்டுமே அவர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த தங்கராசு என்பவர் கடந்த மாதம் தனது முகநூல் பதிவில் ஊர்ப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவரையும் அனுமதிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனால் அவரும் ஊர் பகுதியை சேர்ந்த செந்தமிழ் என்பவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இருவர் மீதும் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தசூழலில் ஆதி திராவிட பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து இன்று வடக்கு மாவட்ட காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய்துறை உதவியுடன் பட்டியலின மக்கள் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

செல்வம்

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைப்பு!

ரத்னவேல் கதாபாத்திரம்: பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கிய பகத் பாசில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share