பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இன்று (செப்டம்பர் 17) இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் தரிசித்துவிட்டு, கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதனால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தமிழகத்தின் வெவேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த சூழ்நிலையில்தான், பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பௌர்ணமியை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 17) திருவண்ணாமலைக்குச் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 15 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இதுமட்டுமல்லாமல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அதிநவீன வசதி கொண்ட 30 பேருந்துகள் இயக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
குக் வித் கோமாளி மணிமேகலை பற்றி அதிர்ச்சி தகவல்கள்… வீடியோ வெளியிட்டு நீக்கிய நடிகர்!
வெப்பம் நீடிக்குமா? மழை குளிர்விக்குமா? வானிலை மைய அப்டேட் இதோ!
திடீரென பெரியார் திடலுக்கு சென்ற விஜய்