ஈரோடு காட்டன்… ஆவின் நெய்… ஏற்றப்பட்ட திருவண்ணாமலை தீபம்!

Published On:

| By Selvam

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (டிசம்பர் 13) மாலை 5.55 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து மாலை 5.55 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில்  மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், “அண்ணாமலையாருக்கு அரோகரா…” என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டு வணங்கினர்.

திருவண்ணாமலை தீபத்திற்காக 33 மீட்டர் நீளமுள்ள மெல்லிய காட்டன் ( காடா பீஸ்) துணியை ஈரோட்டில் இருந்து ஒருவரும் திருவண்ணாமலை அகத்தியர் ஆசிரமத்தில் இருந்தும் ஸ்பான்சர் செய்கிறார்கள்.

இன்று ஒரு நாள் மட்டும் 40 டின் ஆவின் நெய் மலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஒரு டின் 15 கிலோ எடையுடையது.

அதன்டி, 600 கிலோ நெய் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காட்டன் துணியை பந்து போல சுற்றி நெய்யில் ஊற வைக்கப்படும். பின்னர் காட்டன் மீது நெய் ஊற்றி தீபம் ஏற்றப்படும்.

ஒவ்வொரு நாளும் மாலை மூன்று மணிக்கு மலைக்கு 25 டின் நெய் (375 கிலோ) எடுத்துச் செல்லப்படும்.

ஏற்கனவே எரியும் தீப துணியை அணைத்து அதில் உள்ள சாம்பலை எடுத்து தினமும் நெய் ஊற்றி தீபம் புதிதாக ஏற்றப்படும். இதேபோல 11 நாட்களும் தீபம் ஏற்றப்படும்.

ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றும்போது சாம்பல் எடுத்து வந்து நெய்யுடன் கலந்து பக்தர்களுக்கு விசேஷ விபூதியாக வழங்கப்படும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

போட்டியிடும் தமிழ் ஹீரோஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share