கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு இன்று (டிசம்பர் 7) அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டும், 14ஆம் தேதி பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4,089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10,110 நடைகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக http://www.tnstc.in erன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!
நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!
பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்