அதிகாலையில் கோர விபத்து: 3 பேர் பலி!

தமிழகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்து மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (டிசம்பர் 4) அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காந்தி நகர் பகுதியில், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், பெங்களூருவிலிருந்து காய்கறிகளை திருவண்ணாமலைக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இந்தக் கோர விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மற்றும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அதிகாலையில் நடந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உழைத்தவனுக்கு பதவியில்லை : ஆர்.எஸ்.பாரதியின் கலகக் குரல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *