திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவைச் சேர்ந்த ஆரிப் என்பவரை தனிப்படை போலீசார் இன்று (பிப்ரவரி 16) கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நள்ளிரவு தொடர்ச்சியாக 4 ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்ய வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில், கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற தனிப்படையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆரிப் என்பவரை இன்று கைது செய்தனர். அவரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
செல்வம்
ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!
வாக்காளர் பட்டியலில் முறைகேடு: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!