அரசாணை ஊதியம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட தூய்மைப்பணியாளர்கள்  முடிவு!

தமிழகம்

அரசாணையின்படி ஊதியம் வழங்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திருப்பூர் மாவட்டத் தூய்மைப்பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில், திருமுருகன்பூண்டி ஆகிய ஆறு நகராட்சிகளில் தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னா் தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அரசாணையில் தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ரூ.572, குடிநீா்ப் பணியாளா்களுக்கு ரூ.648, ஓட்டுநா்களுக்கு ரூ.687 வீதம் தினசரி ஊதியம் வழங்க வேண்டும்.

இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்கக் கோரி திருமுருகன் பூண்டி, பல்லடம் நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தைத் தொடா்ந்து 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் திருப்பூா் நகராட்சிகள் நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து பேசியுள்ள சிஐடியூ ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், “திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் பேச்சுவாா்த்தை நடத்தி சமூகத்தீா்வு காண வேண்டும். இல்லாவிட்டால் ஜூலை 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: இரவு உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *