உடுமலையில் கள்ளச்சாராய மரணமா? திருப்பூர் போலீஸ் மறுப்பு!

Published On:

| By Selvam

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு பேர் பலியானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 65 பேர் பலியான சம்பவம் தமிழத்தையே உலுக்கியுள்ளது. இதன் விளைவாக, சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 29) மதுவிலக்கு தடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கள்ளச்சாராயம் தயாரித்து விற்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகம் பழங்குடியினர் மாவடைப்பு செட்டில்மென்ட் குடியிருப்பு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த இரண்டு பேர் பலியானதாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழின் முகநூல் பக்கத்தில்” இன்று செய்தி வெளியானது.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியான மாவடைப்பு செட்டில்மென்ட் குடியிருப்பில் கள்ளச்சாராயம் குடித்த ஐந்து பேர் சீரியஸ்,  என்ற செய்தி சமூக வலைதளமான தினமலர் நாளிதழின் முகநூல் பக்கத்தில் இன்று காலையில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட செய்தி பொய்யான செய்தியாகும். அதுபோன்று எந்த நிகழ்வும் நிகழவில்லை. எனவே இந்த வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூன்று நாட்களில் மூன்றாவது நிகழ்வு: ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை சரிந்து விபத்து!

‘கல்கி’ பார்ட் 2-க்கு வெறித்தமான வெயிட்டிங்: ரஜினி ட்வீட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel