திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் இன்று (ஜூன் 14) சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மேரி இம்மாகுலேட் தனியார் பள்ளி வளாகத்திற்குள் இன்று (ஜூன் 14) சிறுத்தை ஒன்று புகுந்ததாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அந்த தனியார் பள்ளியில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை எந்த வழியாக பள்ளிக்குள் புகுந்தது என்றும், தற்போது எங்கு உள்ளது என்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தையால் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஹமாரே பாரா’ படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை – முஸ்லீம் தலைவர்கள் வரவேற்பு!
தமிழிசை வீடு தேடிச் சென்ற அண்ணாமலை