உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி தொற்று பரவல் குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது, அதன் படி பக்தர்களும் நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இதையடுத்து, 9 மணி நேரத்துக்கு முன்பாகவே, திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் 11¼ மணிநேரம் (காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி கோவில் நிர்வாகம் இன்று (அக்டோபர் 18 ) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ”வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால், சுவாமி தரிசனம், ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் சர்வ தரிசனத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை! கண்ணீர் விட்ட அசீம்
புஷ்பா 2 : சமந்தாவுக்கு பதில் தமன்னா?