திருப்பதி: நாளை ரூ.300  ஆன்லைன் டிக்கெட்!

Published On:

| By Minnambalam

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான ரூ.300 ஆன்லைன் டிக்கெட் நாளை (பிப்ரவரி 13) வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொண்டு, குறிப்பிட்ட நாளன்று சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

இதில் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களுக்கு நடுத்தர வர்க்க பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த டிக்கெட்டுகள் நேரில் வழங்கப்படாமல், ஆன்லைனில் மட்டுமே தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இம்மாதம் பிப்ரவரியில் வரும் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் நாளை (பிப்ரவரி 13) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வழங்கப்பட உள்ளதாக  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதேபோன்று, அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் நேற்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளிவெளியானது.

தேவஸ்தான இணையத்தின் மூலம் இம்மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும், அதேபோல், அடுத்த மார்ச் மாதத்துக்கும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

-ராஜ்

இது தான் திராவிட மாடல் அரசா? நாராயணன் திருப்பதி கேள்வி!

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment