திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா நேற்று (ஜனவரி 28) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சூரிய ஜெயந்தி, மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றது.
திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளும் விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருமலையில் ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமன் வாகன சேவைகள் நடைபெற்றது.
மதியம் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் மீண்டும் கற்பகவிருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவையொட்டி நேற்று சர்வ தரிசன டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டது.
பக்தர்கள் அனைவரும் நேரடியாக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக சர்வ தரிசன முறையில் மட்டுமே சுவாமியை தரிசித்தனர். விஐபி தரிசனம் உட்பட அனைத்து சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மேலும், அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என திருமலை அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.
சக்தி–
முத்துக்குமார் நினைவு தினம்: மரியாதை செலுத்திய திருமா
குழாய் உடைப்பு : தினசரி வீணாகும் 2லட்சம் லிட்டர் குடிநீர்!