திருமலை – திருப்பதி கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் வசதிக்காக பெங்களூருவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த புதிய கல்யாண கட்டாவை அறங்காவலர் குழு தலைவர் திறந்து வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் வய்யாலி காவலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெப்பக் குளம் மற்றும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கல்யாண கட்டாவை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா நேற்று திறந்து வைத்து பேசுகையில், “திருப்பதி வரமுடியாத பக்தர்களுக்காக இங்கு 7 லட்சம் ரூபாய் செலவில் குளம் கட்டப்பட்டுள்ளது.
பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த கல்யாண கட்டா அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், சுவாமி குளத்தில் புனித நீராடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்து குளம், கல்யாண கட்டா, பிரசாத விற்பனை மையம், தேவஸ்தான தயாரிப்பு பொருட்கள் விற்பனை மையம், சேவை டிக்கெட் கவுன்டர் ஆகியவற்றை அறங்காவலர் குழு தலைவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து அங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஶ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலின் ஸ்டூடியோ பணிகள் நடைபெற்று வருவதை அவர் ஆய்வு செய்தார்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!