திருப்பதி: ஜனவரி 1 வரை டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய முடியாது!

தமிழகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்வோர் இலவச டோக்கன்கள் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஜனவரி 1ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதையொட்டி, டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 24ஆம் தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வைகுண்ட வாசல் 10 நாட்கள் தரிசனத்தை முன்னிட்டு டிசம்பர் 22 முதல் 24, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 வரை ஏழுமலையான் கோயிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சகஸ்ர தீபாலங்கார சேவை பக்தர்களின்றி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் விஐபிக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் வரை விஐபி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதி வரையிலான அனைத்து டோக்கன்களும் நேற்று அதிகாலை 4.30 மணி வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் கவுன்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. இனி இலவச டோக்கன்கள் வழங்கப்படாது எனவும், டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்துக்கு வர வேண்டும். டோக்கன்கள் இன்றி திருப்பதிக்கு வந்தால் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கிரில்டு கார்ன்!

சரிகிறதா ‘சலார்’ வசூல்?… கலெக்‌ஷன் எவ்வளவு?

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழு தீர்மானம்- எடப்பாடிக்கு உதவிய பன்னீர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *