நெல்லையில் மழை, வெள்ளத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்தசூழலில், நெல்லை மாவட்டத்தில் இன்று சற்று மழை குறைந்துள்ளது.
இதனால் நகரின் பல பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல தண்ணீர் அதிகமுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பு படையினர் படகு மூலமாக மீட்டு வருகின்றனர். இந்தசூழலில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் முருகன் கோவில் அருகே கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் சிவகுமார் (59) என்பவர் பலியாகியுள்ளார். அதேபோல, மேலப்பாளையம் நடராஜபுரம் அருகே பட்டத்தி அம்மாள் என்ற வயதான மூதாட்டி வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.
நெல்லையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி குமாரவேல் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானர். நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய வெள்ளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை பகுதியில் மழை வெள்ளத்திற்கு நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்பல்லோவில் அமைச்சர் துரைமுருகன்: என்னாச்சு?
சீனியர் சிட்டிசன்களுக்கு: ஃப்ரீ பஸ் டோக்கன்கள்: பெறுவது எப்படி?