திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையேயான பேருந்து சேவை 5 நாட்களுக்கு பிறகு இன்று (டிசம்பர் 22) தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் கடந்த 17, 18ஆம் தேதி பெய்த அதிகனமழையால் இரு மாவட்டங்களிலும் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. தங்களது உடமைகளை இழந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையால் ஏரி, குளம் உடைந்ததன் காரணமாக திருநெல்வேலி – தூத்துக்குடி – திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலைகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனினும் சாலை போக்குவரத்துக்கான பாதைகளை தற்காலிகமாக சீரமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டியது. அதனால் முதலில் திருநெல்வேலி – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து வழக்கம்போல தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே நேர்வழி பாதையை சீரமைக்க தாமதமாகும் நிலையில் குரும்பூர், நாசரேத், சாத்தான்குளம், ரெட்டியார்பட்டி வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
எனினும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையேயான ஏரல் பாலம், ஆத்தூர் பாலம் உடைப்பட்ட நிலையில் பேருந்து சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது பாதை சீரமைக்கப்பட்ட நிலையில் திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையேயான அடைக்கலாபுரம், ஆறுமுகனேரி, முக்காணி என நேர்வழியில் வழக்கமான பேருந்து சேவை இன்று தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் முதல் தூத்துக்குடி வரை நேர்வழியில் பேருந்துகள் இயக்கப்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நேற்று சாக்ஷி… இன்று புனியா: கண்ணீருடன் அடுத்தடுத்து விலகும் மல்யுத்த வீரர்கள்!
சென்னை வராதது ஏன்? – எங்களாலும் கேட்க முடியும் : நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதில்!
10 அடி தண்ணீர்… முதல் மாடியில் 3 நாட்கள்- அமைச்சர் அனிதாவுக்கு நடந்தது என்ன?