திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தரிசன கட்டணம் இன்று முதல் (நவம்பர் 13) உயர்த்தப்பட்டுள்ளது
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கந்த சஷ்டி விழா புகழ்பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று யாக சாலை பூஜையுடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் தரிசன கட்டணம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.100-ஆக இருந்த விஸ்ரூப தரிசன கட்டணம் ரூ.2000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாள்களில் ரூ.500-ஆகவும், விசேஷ நாள்களில் ரூ.2000-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்புமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?
நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த பட்டாசு… பெரியப்பா மீது வழக்குப்பதிவு!