திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற மாசி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாதம் நடைபெறும் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவில் ஒரு வாரத்திற்கு முன்பாக சில பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருந்து தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
பிப்ரவரி 25-ஆம் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இந்த நிலையில் மாசி திருவிழாவின் 10-ஆம் திருவிழாவான இன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
முதலில் விநாயகர் தேர் ரத வீதிகளில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் அமர்ந்துள்ள தேர் வலம் வந்தது.
இந்த தேரோட்டத்தை காண மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
செல்வம்
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்…வதந்’தீ’ அணையட்டும் : வைரமுத்து ட்வீட்!
அந்தமான் நிக்கோபார் தீவு: அதிகாலை நிலநடுக்கம்!