கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: வீட்டிலேயே பலகாரம் தயாரிக்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

தமிழகம்

நவராத்திரி கொண்டாட்டம்  நாளை (செப்டம்பர் 26)  தொடங்குகிறது. அடுத்தடுத்து ஆயுத விஜயதசமி, தீபாவளி பண்டிகைகள் தொடரும்.

இந்த நிலையில் வீட்டிலேயே பலகாரம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவும்.

* பலகாரம் செய்வதற்கு அரிசி வாங்கும்போது ஐ.ஆர்.20 பச்சரிசி என்று கேட்டு வாங்குங்கள். பலகாரம் சுவையாகவும் மென்மையாகவும் வரும்.

* அதிரசம், முறுக்கு போன்றவற்றுக்கு முழு தானியங்களையும், சீப்பு சீடை, மாவுருண்டை போன்றவற்றுக்கு அரைத்த மாவையும் அளவீடுகளாகக் கொள்ள வேண்டும்.

* மாவு மில்லில் அரைக்கும்போது அரை கிலோ அரிசியைக் கொடுத்து முதலில் அரைத்து வாங்கிக்கொண்டு, பின் நம் பொருட்களை அரைத்தால் கலப்படமில்லாத மாவு கிடைக்கும்.

* மாவு அரைத்த அன்றே பலகாரம் செய்யாவிடில் நன்கு ஆறவைத்து அகலமான பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் ஓரிரு நாள்களுக்கு மாவு நன்றாகவே இருக்கும் (அதிரசத்துக்கு இது பொருந்தாது).

* முறுக்கு, ரிப்பன் பக்கோடா தயாரிக்கும்போது மாவை பகுதிகளாகப் பிரித்து பிசைந்துகொண்டால் பலகாரம் இறுதிவரை எண்ணெய் குடிக்காமல் வரும்.

* பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து பயன்படுத்தும்போது மாவு பாத்திரத்தை மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

* எண்ணெய்க் காய்ச்சல், பலகாரத்துக்குப் பலகாரம் மாறுபடும். அதிரசம், குலாப்ஜாமூன் போன்றவற்றுக்கு எண்ணெய் மிதமாகக் காய வேண்டும்.

* இயன்றவரை வனஸ்பதி, செயற்கை நிறமூட்டி, ஆப்பசோடா போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை இல்லாமலேயே பலகாரங்களை சுவையாகத் தயாரிக்க முடியும்.

* சுட்ட அதிரசங்களை சேகரித்துவைக்கும்போது, டப்பாவின் அடியில் கிச்சன் டிஷ்யூஸ் வைத்து, அதன்மீது அதிரசங்களை அடுக்கினால் உபரி எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக்கொள்ளும். சுவையும் மாறாமல் இருக்கும்.

* காராபூந்தி, மிக்ஸர், முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்கள் செய்யும்போது, கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

* அதிரசம் செய்ய நல்லெண்ணெய்தான் பெஸ்ட்.

* பொதுவாக மெதுவடை, மசால் வடை மற்றும் கார வகைகளுக்கு கிராமப் புறங்களில் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயைப் பயன்படுத்துவார்கள்.

நகர்ப்புறங்களில் ரீஃபைண்டு ஆயில் என்னும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். ரீஃபைண்டு ஆயில், குறைவான அளவே இழுக்கும்.

செக்கில் ஆட்டிய எண்ணெய் இயற்கையான மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.

முத்தாய்ப்பாக ஒரு குறிப்பு: பலகாரங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்குள் தீரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கே தயாரியுங்கள்.

கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை!

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு மணகோலம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *