தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரம்: அமைச்சர்கள் ஆலோசனை!

தமிழகம்

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து நாளை (செப்டம்பர் 28) அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும், அதாவது தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனடிப்படையில் நேர கட்டுப்பாடு என்பது தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், சீன பட்டாசு விற்பனையைக் கண்காணிப்பது, பசுமை பட்டாசு விற்பனைக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக நாளை 28ஆம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பட்டாசு சங்கத்தின் பிரதிநிதிகள் மத்தியில்  ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய்த்துறை அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற உள்ளனர்.

மேலும், சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறு பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனைக்கு பிறகே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்படும்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : கணித அறிவியல் நிறுவனத்தில் பணி!

போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது: கி.வீரமணி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.