மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்த கால அவகாசம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெற வரும் 2024 பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 8) வீட்டு வசதித் துறை வெளிட்டிருக்கும் அறிவிப்பில்,

“அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ஆம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 04.09.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம்!

ஜி20 மாநாடு: பிரதமர் மோடி – பைடன் சந்திப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share