வண்டலூரில் புலிகள் சஃபாரி!

தமிழகம்


வண்டலூரில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் தனித்துவமாக புலிகள் சஃபாரி 2023ல் திறக்கப்படவுள்ளது.

நேற்று உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி வண்டலூர் பூங்காவில் புலிகளின் முக்கியத்துவம் மற்றும் உணவுச் சங்கிலியில் அவை வகிக்கும் முக்கிய பங்கு குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஓவியப் போட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த போது வண்டலூரிலும் சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது. இந்நிலையில் உலகம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்புவது போன்று தற்போது வண்டலூர் பூங்காவும் பழைய நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் 2023ல் வண்டலூரில் புலிகள் சஃபாரி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வண்டலூர் விலங்கியல் பூங்கா இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இதுகுறித்து கூறுகையில், “லாக்டவுனில் வண்டலூர் பூங்காவும் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகப் புலி சஃபாரிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் திட்டமிடும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று. புலிகள் சஃபாரி என்பது புலிகளின் பராமரிப்பிற்கான பிரத்தியேகமான அடைப்பு ஆகும். நாட்டிலேயே முதன்முறையாக இரவு சஃபாரிக்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பூங்காவின் மறுசீரமைப்புக்காகப் பெருநிறுவன நிதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்” என்றார். தற்போது 10 வெள்ளை புலிகள் உட்பட 28 புலிகள் மட்டுமே வண்டலூரில் உள்ளன.

அதுபோன்று 10 சிங்கங்கள் மட்டுமே இருப்பதால் சிங்கம் சஃபாரி மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சிங்கங்கள் கொரோனா வைரசாலும், நான்கு சிங்கங்கள் பல்வேறு நோய்களாலும் இறந்தன என்று வண்டலூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வண்டலூர் பூங்காவுக்கு வார நாட்களில் சுமார் 2,500 பார்வையாளர்களும் வார இறுதி நாட்களில் கிட்டத்தட்ட 9,000 பார்வையாளர்களும் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில், 10,000 முதல் 15,000 பார்வையாளர்கள் வருகைத் தருகின்றனர். இது கோவிட்க்கு முந்தைய வருகை கணக்கில் 75% ஆகும்.

இந்நிலையில் வண்டலூரில் மாற்றங்களை கொண்டு வந்து, மெட்ரோ ரயில் இணைப்பு பணிகளும் முடிந்தவுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம் எனவும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறியுள்ளார். புலிகளை ஒரே பகுதியில் பாதுகாப்பாக கண்டு ரசிக்கவும், அதனைக் கண்டவாறே காட்டில் சஃபாரி செய்வதும் புலிகள் சஃபாரி ஆகும்.
பிரியா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *