ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றும் வைபவத்தில் இந்த துள்ளு மாவும் இடம்பெறும். கூழ் ஊற்றுவதற்கு முன்பு இதை எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம்.
என்ன தேவை?
வெல்லம் – ஒரு கப்
பச்சரிசி – 2 கப்
வறுத்த பாசிப் பயறு (பச்சைப் பயறு) மாவு – அரை கப்
வடித்த சோறு – 2 கப்
எப்படிச் செய்வது?
பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். உரலில் இடித்தால் இன்னும் சிறப்பு. வெல்லத்தைப் பொடித்து பச்சரிசி மாவுடன் சேர்த்துக் கலக்கிக் கிளறவும். இதோடு வறுத்த பாசிப் பயறு மாவையும் சில ஊர்களில் சேர்த்துக்கொள்வார்கள். இதுதான் துள்ளு மாவு. அழுத்திக் கொழுக்கட்டைபோல பிடிக்கப்பட்ட சோற்று உருண்டையை, இந்தத் துள்ளு மாவில் ஒருமுறை புரட்டியெடுக்கவும். ஒரு முறத்தில் வேப்பிலைகளை வைத்து, அதன் மீது இந்த உருண்டைகளை வைத்து அம்மனுக்குப் படைக்க வேண்டும்.
ஔவையார் கொழுக்கட்டை (ஆடி ஸ்பெஷல்)