அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. dogs bite 3 year old baby
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் சாலையில் செல்வது என்பதே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயபுரத்தில் 31 பேரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் தெரு நாய்களின் தொல்லை காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்று வயது குழந்தையை 3 தெரு நாய்கள் இன்று (நவம்பர் 27) கடித்து குதறியுள்ளன.
குழந்தையின் சத்தம் கேட்டு வந்த தாய் தெரு நாய்களை விரட்டி, படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் அதிராம்பட்டினம் நகர சபைக் கூட்டத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அதிராம்பட்டினம் நகராட்சி 27 வார்டுகளில் தெருவில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்துவதற்கு நாய் ஒன்றுக்கு ரூ.1,450 கட்டணம் என ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் கடந்து உள்ள நிலையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இதற்கிடையே தற்போது நாய்கள் தொல்லையும், அதன் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”இதயத்தை வென்ற என் ஓமனா”: ஜோதிகாவை பாராட்டிய சூர்யா
தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்… லோகோவை கவனிச்சீங்களா?
dogs bite 3 year old baby